Thursday 17 September, 2009

கதிரவன் - சிறுகதை


வணக்கம் சார்...என் பெயர் கதிரவன்...பி.எஸ்ஸி.,பி.டெக்., எம்.பி.ஏ படிச்சிட்டு ஒரு கம்பெனியில டிஜிஎம் ஆக இருக்கின்றேன்...

எதிரில் தெரிந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர்...கதிரவனை பார்த்ததும் வாங்க உட்காருங்க என்று சொல்லியபடி தன் மனைவியிடம் வந்தவருக்கு காப்பி கொடுக்கும்படி ஆரம்பிக்கின்றார்..

ரொம்பச் சந்தோசம் தம்பி... உங்களை மாதிரி நிறைய படிச்சவங்கள் எங்களை மாதிரி ஆளுங்ககிட்டே வந்து பேசறீங்க பாருங்க அதுவே மனசுக்கு ரொம்ப சந்தோஷம்.. ம்ம்ம்ம் சொல்லுங்க என்ன விஷயமா வந்திருக்கிங்க?


சார்..வேலை செய்யறேன் ..வாங்கற சம்பளத்தை அப்படியே வீட்டிலே கொடுத்திடறேன்...என் மனைவி எந்தெந்த பேங்குக்கு எவ்வளவு தரவேண்டுமோ பிரிச்சி தந்திடுவார்...


சொந்த வீடா..... பேங்க் லோனா... ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்யறது... ரெண்டு பொண்ணுங்க வேற.. நல்லாவும் படிச்சிருக்கிங்க.. வேற என்ன குறைங்க... இந்த லோன் எல்லாம் முடிஞ்ச பிறகு வாழ்க்கையில கடைசி வரை சந்தோஷம் தானே.... இந்தாங்க காப்பி எடுத்துங்குங்க.....

வணக்கம் அம்மா.... ரொம்ப தேங்க்ஸ்ங்க...

சத்தமில்லாமல் காப்பி குடிக்கும் அழகை பார்த்தவாறு...கணவரிடம் பாதி சக்கரை போட்ட காப்பியினை தந்தார்...இயக்குனரின் மனைவி

சரி தம்பி சொல்லுங்க... என்ன விஷயமா என்னை பார்க்க வந்திருக்கிங்க

சார்.....வந்து.... என்னா தான் மாசா மாசம் சம்பாதித்தாலும்... ஏதோ ஓர் ஏக்கம் எனக்குள்ள இருக்கு சார்... அதான் உங்கள பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்...

ஏங்க இவரை பார்த்தா.... நம்ம தூரத்து சொந்தத்தில் இருக்கிற மாதவன் மாதிரியே இல்ல...


ம் சொல்லுங்க கதிரவன்..

ஆஹா நம்ம பேரை ஞாபகம் வச்சிருக்காரே.... இவ்வளவோ நேரமாகியும்.. அதுவே கதிரவனுக்கு பச்சை விளக்கு காட்டியது...

நானும் உங்க கிட்டே வந்து உதவி இயக்குனரா..சேரணும் சார்...

தம்பி..அதற்கு ரொம்ப சிரமப்பட வேண்டி இருக்கும்... அது உங்களால் முடியாதே...

சார் உங்க இடத்தில இருந்து நீங்க சொல்றீங்க...அதுவே என் இடத்திலிருந்து பார்த்தா... ஏதோ என் திறமைகள் எல்லாம்..ஒடுக்கப்படுவதா..உணர்கின்றேன்.... சார்...என் கனவுகள்..கற்பனைகள்..எல்லாம்..17 வருசமா... என்னை ஆட்டிப்படைக்கிறது சார்....

தம்பி நீங்க அப்பவே வந்திருக்கலாமே....

வந்தேன் சார்...அவரை பார்த்தேன்..இவரை..பார்த்தேன்..ஆனால்....யாரை பார்க்கணும்னு தெரியாமல்... போய்விட்டேன் சார்....அப்போ குடும்பம்...பெற்றோர்...வேலை...திருமணம்...ன்னு நிறைய கமீட்மெண்ட்...அதுவே என்னை விரட்டியது...சார்

தம்பி... உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் சொல்லுங்க?

சார் நான் நல்லா கதைகள் எழுதுவேன்... கவிதைகள் எழுதுவேன்...திரைக்கதை வசனம் கூட எழுதுவேன் சார்..எனக்கு தெரிஞ்சவங்க நிறைய பேர் இங்கே சினிமாவில் இருக்காங்க சார்...ஆனா அவங்ககிட்டே போய் எனக்கு ஏதாவது சான்ஸ்..கொடுங்கன்னு கேட்க..ஏதோ தடுக்கின்றது....

சொந்தக்காரன் மாதவன் தான் வந்துள்ளான் என்ற நினைப்பில...தம்பி இருந்து சாப்பிட்டு போறீங்களா? அவருக்கு ரெண்டு சப்பாத்தி..அப்படியே உங்களுக்கும் ரெண்டு போட்டு தருகின்றேனே...

கதிரவனுக்கு தொண்டை அடைப்பது போல உணர்வு சில நிமிடங்கள்...

சரிங்கம்மா....

சார்... இப்போ ஏதோ ஓர் தைரியம் வந்துள்ளது சார்...வாழ்க்கை ஒரு முறை தான் வருகின்றது... அதில் நாம் நினைத்த மாதிரி வாழலாம் என்ற துணிவும் வந்துள்ளது சார்... பேச்சே கதிரவனை நிமிரச்செய்தது...

தம்பி பாருங்க...நான் பீல்டுக்கு வந்து...அப்படியே...30 வருசத்துக்கு மேல போயிடுச்சி.... போய் சுசிகணேசனையோ இல்ல இப்போ வத்திருக்கிற சசிகுமார்...சமுத்திரகனி...பாருங்க... அவங்க உங்களுக்கு உதவி செய்வாங்க...


சார்..ஒன்னு சொல்லட்டுமா...இப்போ புதுசா வந்தவங்களை..எப்படி நெருங்கி பார்ப்பது தெரியல... ஏன்னா.. முதல் படமே அவங்களை..எங்கேயோ உச்சத்துக்கு கொண்டு போயிடுது... நீங்க தான் எனக்கு வழி சொல்லணும்...


சரி உங்க குடும்பத்தை பற்றி சொல்லுங்க....

அப்பா அம்மா அக்கா...அக்காவின் பிள்ளைகள்...மாமா..இறப்பு... மாமனார் இறப்பு...திருமணம் ஆன மனைவியின் சகோதரி..ஆகாத சகோதரி...மாமியார்...இப்படி..எல்லாவற்றையும்...30 நிமிடத்தில் சாப்பிட்டுக்கொண்டே..சொல்லி முடித்தான்...கதிரவன்...

இவனின் பேச்சை கேட்ட இயக்குனரின் மனைவிக்கும் ஏதோ ஓர் பாசம்..அது மாதவன் மீது இருந்த அந்த பாசம்...அப்படியே இவன் மீதும் தாவியது...

தம்பி..உங்க வீட்டு விஷயங்களை.. ஒளிவு மறைவு இல்லாம சொல்லிட்டீங்க... உங்க பிரியா கல்யாணத்திற்கு உன் மாமியார் வருவாங்களா?.... அப்படி உங்க மாமியார் வந்தாங்கன்னா...உங்களுக்கு.. திரைப்படத்துறையில கண்டிப்பா எதிர்காலம் இருக்கு... போங்க..போய் உங்க அக்கா கிட்டே மனம் விட்டு பேசுங்க... ஏன்னா...இரண்டு குடும்பத்திலேயும்... இழப்புகள்.. இரண்டு..குடும்பத்திலேயும்...சிக்கல்கள்...இதையெல்லாம் நீங்க தீர்த்து வைச்சிங்கன்னா... உங்க அக்கா பொண்ணு பிரியா கல்யாணமும்... உங்க ரெண்டாவது மைத்துனி கல்யாணமும்..நல்லபடியா..முடியும்... சண்டை சச்சரவு..குழப்பங்கள்...கோபங்கள்..இல்லாத குடும்பங்களே கிடையாது...ஆனால்... வைராக்கியம் தான் முக்கியம்...என்று... இவங்களை..அழைக்கமாட்டேன்...அவங்களை..அழைக்கமாட்டேன்...பிடிவாதம் இருந்தா... உங்க எதிர்காலமும் பாதிக்கும்...

உங்க மனைவிக்கும் ஓர் நிரந்தரமான வேலையும்... கிடைக்கும்... இரண்டு குடும்பமும்..ஒன்னு சேர்ந்தாலே...உங்க வாழ்க்கையும் இனிக்கும்... உங்க பின்னாடி...ஆயிரம் இளைஞர்கள்...நிச்சயமா வருவாங்க....

கதிரவன்..கண்களில் வழிந்த நீரை துடைக்க முடியாமல்..கையெடுத்து கும்பிட்டான்...

வாசல்வரை...வந்த புகழ்பெற்ற இயக்குனர்.... சிந்திய கண்ணீர்த்துளிகளை...துடைத்தவாறு...கையசைத்தார்...

புறக்கணிக்கப்படும் ஓவ்வொரு ஜீவன்களிலும்....துடித்துகொண்டிருக்கும் ஒவ்வொரு ஜீவன்களிலும்... இந்த இயக்குனர்..போன்று.... ஆறுதல் தந்தால்.... கதிரவனைப் போன்றவர்களுக்கு .... ஏன் இருட்டு தேசம் வரப்போகின்றது...

காலம் ஒருநாள்........ மாறும்..... கதிரவன் கூட மக்களால்... புறக்கணிக்கப்படாத... ஆளாகலாம்....


(பின்குறிப்பு: ஏதேச்சையாக.... குழுமத்தில் இக்கதையினை படிக்கும் திரு.மாலன் / திரு.கல்யாண்ஜி.. அவர்களுக்கு கதிரவனை பார்க்கவேண்டும் போல் இருந்தால்.... கதிரவன் எதிர்காலம்..இன்னும் பிரகாசமாகலாம்.... )


கதிரவன் யார்?.... விடை கிடைக்குமா?.... கிடைக்கலாம்....

Monday 14 September, 2009

என்னையே எனக்கு அடையாளம் காட்டிய அன்புடன் குழுமத்திற்கும்...அதன் உறுப்பினர் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்...

17 வருடங்கள்...இரப்பர் துறையில் உழைத்தாலும்...ஏதோ ஓர் ஏமாற்றம் என்னுள்ளே...

அந்த ஏமாற்றத்தை போக்க வருபவர்கள்...

என் மதிப்பிற்குரிய திரு.கல்யாண்குமார் அவர்கள்...மற்றும்..திரு.பாலாஜி அவர்கள்... இவர்களைப் போன்றே இன்னும் அனேக நண்பர்கள் உள்ளனர்..

அவர்களை..இனி வரும் காலங்களில் பார்ப்போம்..

நட்புடன் இளங்கோவன்
இந்த வலையினை உற்சாகமுடன் ஆக்கிய என் தங்கை நட்சத்திராவிற்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் ஈடாகாது...


அதே போன்றே...என் மாப்ஸ்... விச்சு...குவைத்தில்...எனக்காக...இரவும் பகலும் உழைத்து...உண்டாக்கிய இந்த வலையினை...இனி இளங்கோவன்..வழக்கம் போல் வருவான்...

நீங்களும் வாருங்கள்...தோழர்களே
காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்....

எனக்காகவே எழுதப்பட்ட வரி தான் இது...

என்னை அறிந்தவர்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை இது...

நீண்ட நாட்களுக்கு பிறகு...

வலையினுள்..வலியில்லாமல்... வருகின்றேன்

படிப்போரே... வாருங்கள்... நட்பை வளர்ப்போம்..

நட்புடன் இளங்கோவன்.